2030 ஆம் ஆண்டளவில் இராணுவ உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 2 லட்சத்து 783 பேர் கொண்ட இராணுவப் படையை அடுத்த வருடத்தில் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் வரை குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையை 2030 ஆம் ஆண்டாகும் போது ஒரு இலட்சமாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
ஆயுதம் தாங்கிய இராணுவப் படைக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவைக் குறைத்து அதனை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.