deepamnews
சர்வதேசம்

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் முர்சல் நபிஷாடா சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான முர்சல் நபிஷாடா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் அவரது பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அவரது சகோதரர் உட்பட இருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

32 வயதான முர்சல் நபிஷாடா, 2021ஆம் ஆண்டு ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றிய பின்னரும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார்.

அவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு காணப்பட்ட போதிலும் அதனை நிராகரித்திருந்தார்.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் பொது விடயங்களில் பெண்களின் பங்கு தடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் முர்சல் நபிஷாடாவின் கொலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள ஆப்கானிஸ்தான் காவல்துறை பிரதானி, விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நடுவானில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள் –  நால்வர் பலி

videodeepam

தீவிரமடையும் இராணுவ நடவடிக்கை – உக்ரைனில் முக்கிய அணை தகர்ப்பு..!

videodeepam

72 மணித்தியாலங்களில் வாக்னர் கூலிப்படையினர் கொல்லப்படலாம்!

videodeepam