deepamnews
இலங்கை

2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வரிச்சலுகையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என ஜனாதிபதி தெரிவிப்பு

2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வரிச்சலுகையே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதால் நாடு கடந்த மே மற்றும் ஜூன் மாதம் போன்ற நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது என அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 15 சதவீதமாக காணப்பட்டது.

எனினும், அதன்பின்னர் 2020 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில 8.4 சதவீதமாக குறைவடைந்தது.

இந்தநிலையில், குறித்த வருடங்களில் வழங்கப்பட்ட வரிச்சலுகை நாட்டின் பொருளாதர நெருக்கடிக்கு காரணமானது.

எனவே அந்நிய செலவணி இருப்தை அதிகரித்து பின்னர் வரிச்சலுகை தொடர்பில் சிந்திக்க முடியும்

எதிர்வரும் வருடத்தில் நாம் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் ஆரம்பமாகிறது.

videodeepam

தந்தையும், மகனும் ஆற்றில் மூழ்கிப் பலி.

videodeepam

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் – 10 மாணவர்களுக்கு விளக்கமறியல்

videodeepam