deepamnews
இந்தியா

சகல கட்சிகளினதும் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அழைப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப் பெரிய ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்கள் தான் வாக்களிக்கிறார்கள். மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். 21 மாத கால திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதற்கான விடை தெரியும்.

திமுக எந்த முன்னேற்றத்தையும் வைத்து ஓட்டு கேட்கவில்லை. பணத்தை வைத்து ஓட்டு கேட்கிறார்கள். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய ஜனநாயக படுகொலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் எந்த அளவு விதிமீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகம், பத்திரிக்கை நண்பர்கள் மக்கள் முன்பு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

எங்களை பற்றி விமர்சிக்க திமுகவிற்கு அருகதை இல்லை. திமுகவுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் நடமாட்டம், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை. எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் இருக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தற்போது மவுனம் சாதிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

Related posts

கச்சத்தீவு பறிபோக திராவிட முன்னேற்றக் கழகமே காரணம் – குப்புசாமி அண்ணாமலை குற்றச்சாட்டு.

videodeepam

தொழில்நுட்ப பாகங்களை தயாரிக்கும் புதிய ஆலையை உருவாக்க 200 மில்லியன் டொலர்கள் வரை முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் துணை நிறுவனம் தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

videodeepam

அரச வீட்டில் இருந்து வெளியேறுமாறு ராகுல் காந்திக்கு அறிவித்தல்

videodeepam