deepamnews
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது.

கனடா நாட்டைச் சேர்ந்த நேயம் பவுண்டேஷனின் நிதி உதவியில் மருந்து பொருட்கள் இன்று சனிக்கிழமை (04) காலை 10 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எஸ்.நித்தியானந்தா மற்றும் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர் எம்.அரவிந்தன் ஆகியோரிடம் யாழ். நீரிழிவு கழகத்தினரால் மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது யாழ். நீரிழிவு கழகத்தின் தலைவர் தி.மைக்கல், யாழ். நீரிழிவு கழகத்தின் செயலாளர் க.கணபதி ஆகியோர் மருந்து பொருட்களை கையளித்தனர்.

நீரிழிவு நோய் வகை ஒன்றிற்கான சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்து தட்டுப்பாடாக இருப்பதை போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ். நீரிழிவு கழகத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

மலையக மக்கள் குறித்து அங்கஜன் இராமநாதன் கவலை .

videodeepam

மன்னாரில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது

videodeepam

பொருளாதாரத்தைப் போன்றே காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி

videodeepam