இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு, அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கியதன் பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர், யோவ் கெல்லன்ட் அந்தநாட்டின் நீதித்துறையை மறுசீரமைப்பதற்கான சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக செயற்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜெருசலத்தில் உள்ள பிரதமர் நெதன்யாகுவின் வீட்டின் முன்பாக பலர் கூடியுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு செயற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம், இஸ்ரேலிய ஜனாதிபதி, குறித்த நீதி மறுசீரமைப்புக்களை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.