deepamnews
சர்வதேசம்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் இராணுவம்

சீன அரசை இராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், பீஜிங் நகரம் ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

அத்துடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் திகதி பீஜிங் திரும்பிய ஜி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

அத்துடன், 80 கி.மீ நீளமுள்ள ராணுவ வாகனங்கள் பீஜிங்கை நோக்கிச் செல்கின்றன என்றும்  கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை சீனாவில் கிட்டத்தட்ட ஆறாயிரம் விமானங்கள் எந்த விளக்கமும் இல்லாமல் சேவை இடைநிறுத்தப்பட்டதாகவும், அதிவேக ரயில்களின் பயணங்கள் நிறுத்தப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு தகவலில் முன்னாள் சீன ஜனாதிபதி ஹு ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரதமர் வென் ஜிபாவோ ஆகியோர் சீன அரசின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் யுக்ரைனுக்கு சென்றுள்ளார்.

videodeepam

அடுத்த ஜி- 20 உச்சி மாநாட்டில் புடின் கலந்துகொண்டால் கைது செய்யப்படமாட்டார்!  – பிரேசில் ஜனாதிபதி தெரிவிப்பு.

videodeepam

அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி ரஷ்யா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது –  அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவிப்பு

videodeepam