deepamnews
இலங்கை

கொழும்பில் மூர்க்கத்தனமாக அடக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் – 84 பேர் கைது

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியை, பொலிசார் கண்ணீர புகை, மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்து கலைத்ததுடன்,  84 பேரையும் கைது செய்துள்ளனர்.

கொழும்பு – நகர மண்டப பகுதியில் நேற்று பிற்பகல் சோசலிச இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சட்டத்தரணிகள், பௌத்த பிக்குகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

“இளைஞர்களின் கனவுகளை புதைத்த ஆட்சியாளர்களே, அடக்குமுறையை சுருட்டிக்கொள்!” “உடனடியாக பதவி விலகு!” போன்ற கோஷங்களுடன் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு – நகர மண்டப பகுதியில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணி, டின்சன் வீதி, மருதானை ஊடாக கோட்டை பகுதியை நோக்கி செல்ல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும், ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்குள்ளேயே, பொலிசார் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

வழமைக்கு மாறாக ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டு, சுகாதார அமைச்சுக்கு அண்மித்த பகுதியில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டது.

நீர்த்தாரை பிரயோகத்தை பொலிசார் மேற்கொண்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை எதிர்த்து முன்னோக்கி நகர ஆரம்பித்த போது,  கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

இதன்போதே, 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பிக்குகளும், 4 பெண்களும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிலர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சாதாரணதரப் பரீட்சை பத்தாம் தரத்தில் –  கல்வி அமைச்சர் சுசில் அறிவிப்பு.

videodeepam

சீமெந்தின் விலையில் மாற்றம்

videodeepam

ஓமானில் சிக்கித்தவிக்கும் வவுனியாப் பெண் – இலங்கைக்கு அழைத்துவர கோரி  மனு தாக்கல்!

videodeepam