deepamnews
இலங்கை

உயர் பாதுகாப்பு வலய உத்தரவை விலக்கிக் கொள்ள அரசாங்கம் ஆலோசனை

கொழும்பின் பல பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி, அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பாக ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயங்கள் வர்த்தகங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததையடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்சுக்கான பயணங்களை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அதனை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய மாற்றுத் திட்டம் ஒனறு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

புலனாய்வுப் பிரிவுகளின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார்.

எனினும், அதற்கு அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், சட்ட நிபுணர்கள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், இந்த சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தையும் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை

videodeepam

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

நாட்டை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam