deepamnews
இலங்கை

ஜெனிவாவில் தீர்மானம் மீது இலங்கை வாக்கெடுப்பைக் கோரும்.- அமைச்சர் அலி சப்ரி தகவல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் நியாயமற்றது என்றும், அதன் மீது இலங்கை வாக்கெடுப்பை கோரும் என்றும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் பொருளாதார நெருக்கடியின் போது நாட்டின் கௌரவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் ஒன்று என்பதால், இலங்கை தனது நண்பர்களுடன் இணைந்து தீர்மானம் குறித்து வாக்கெடுப்பை கோரும் என அவர்   தெரிவித்துள்ளார்

“இது எங்கள் அரசமைப்பிற்கு எதிரானது நாங்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும். நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

நாங்கள் வெற்றிபெறுகின்றோமோ அல்லது தோல்வி அடைகின்றோமோ என்பது முக்கியமில்லை.

நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாத விடயங்கள் உள்ளன.

நாங்கள் எங்கள் நண்பர்களை தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வோம்.

குறிப்பாக நாங்கள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை குறித்தும் இலங்கைக்கு வெளியே பாதுகாப்பு படையினரின் நீண்டகால பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

மனித உரிமை தீர்மானத்தில் பொருளாதார குற்றங்கள் என்ற சில விடயங்களை குறிப்பிட்டுள்ளனர். பல நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன மனித உரிமை பேரவை பொருளாதார நெருக்கடி குறித்து என்ன செய்கின்றது” என்றும் வெளிவிவகார அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு

videodeepam

வடக்கில் பாரிய பசுமைத் திட்டங்கள் – மன்னார் விஜயத்தின்போது  ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

videodeepam

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாபெரும் கைத்தொழில் கண்காட்சி!

videodeepam