அடுத்த மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று, சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்ற போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வாங் யீயுடன் நியூயோர்க்கில் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார்.
இதன்போது, இலங்கைக் குழுவொன்றின் சீனாவுக்கான உயர்மட்ட பயணம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நவம்பரில் இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு சீனாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளும் என அலி சப்ரி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அது அமைச்சர் மட்டத்திலான குழுவா அல்லது ஜனாதிபதி மட்டத்திலான குழுவா என்பதை அவர் குறிப்பிடவில்லை.