deepamnews
இலங்கை

2023 ஆம் ஆண்டில் அரசின் மொத்த செலவினம் 7 ஆயிரத்து 885 மில்லியன் ரூபாய் என கணிப்பு

2023ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் வரைவு அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

ஒவ்வொரு செலவினங்கள் தொடர்பாகவும், சட்டமூலத்தை அமைச்சரவை பரிசீலித்தது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின்  மொத்த செலவினம் 7 ஆயிரத்து 885 மில்லியன் ரூபாய் ஆகும்.

இதில் மீண்டெழும் செலவினர்,  4 ஆயிரத்து 634 பில்லியன் ரூபாய் எனவும், மொத்த மூலதனச் செலவு 3 ஆயிரத்து 245 பில்லியன் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

செலவினங்களை விட வருமானம் குறைவாக இருக்கும் என்பதால், 4 ஆயிரத்து 429 பில்லியன் ரூபாயை கடனாகப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் ஊடாக எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு

videodeepam

வடக்கில் விகாரை அமைப்பதற்கு குறுக்கே நிற்கிறது கூட்டமைப்பு- விமல் வீரவன்ச ஆவேசம்

videodeepam

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் கைது.

videodeepam