இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்தி செல்ல முயன்ற இருவர் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ள பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், தண்டனை விபரத்தை நாளை அறிவிக்க உள்ளது.
அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 2019ல் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது, ராஜேந்திரன், கணேசன் ஆகியோரிடம் குண்டுகளை தயார் செய்வதற்கான டெட்டனேட்டர்கள், வயர் போன்ற பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், இருவரும் இலங்கை தமிழர்கள் என்றும் சென்னையிலிருந்து இலங்கைக்கு வெடிபொருட்களை எடுத்து செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த க்யூ பிரிவு காவல்துறையினர் அவர்கள் மீது வெடி பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடனும், சாட்சிகளுடனும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இருவரும் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளார்.
தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.