deepamnews
இலங்கை

மன்னாருக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக்  சிவில் அமைப்புக்களுடன் சந்திப்பு.

மன்னாரிற்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டு வருகைதந்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக்  சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு திங்கட்கிழமை மன்னார் பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார்,பிரஜைகள் குழு உறுப்பினர்கள்,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் ஒன்றிய பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலவரம், சமகால நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க துணைத் தூதர்    கேட்டறிந்து கொண்டார்.

இதேவேளை  இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று  மன்னாரில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது எளுவன்குளம் ஊடாக புத்தளம் மன்னார் பாதை திறப்பதன் அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மன்னாரில் இராணுவத்தினர் மற்றும் கடற்படை ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணி விடயம் தொடர்பாகவும் சிலாவத்துறை மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாம் முற்று முழுதாக பொது மக்களின் சொந்த காணிகள் என்றும் அவற்றை மக்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது டன் வட மாகாணத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் இணைப்பாளர் குரூஸ்,முசலி பிரதேச சபை உறுப்பினர் தஸ்னீமா,மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் றமீஸா மற்றும் எழுத்தாளர் அஹனாப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

புதிய மின் கட்டணத்தை அறிமுகம் செய்வதற்கான வேலைத்திட்டம் மீளாய்வு

videodeepam

இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணியிடம் பணம் கொள்ளையடிக்கும் உணவகங்கள்.

videodeepam

சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் தொற்று தொடர்பில் இலங்கையிலும் எச்சரிக்கை

videodeepam