deepamnews
இலங்கைசர்வதேசம்

தென் கொரியாவில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இலங்கை பிரஜையும் உயிரிழப்பு

தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில், சிக்கி இலங்கை பிரஜையொருவரும் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவிக்கையில், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தென் கொரிய தலைநகர் சியோல் நகரில் நடைபெற்ற களியாட்டம் ஒன்றின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி குறைந்தது 153 பேர் உயிரிழந்துள்ளதுடன், 82 பேர் காயமடைந்துள்ளனர்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி இல்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு

videodeepam

வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை – தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை

videodeepam

 மக்களின் அழைப்பின் பெயரில் அம்பன் மணல் அகழ்விடங்களை பார்வையிட்ட சுமந்திரன் எம்.பி

videodeepam