deepamnews
இலங்கை

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் தலைமையில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர்  ருவன்சந்திர தெரிவித்தார்.

மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இந்தியாவின் அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது.

03 வருடங்களுக்குள் மேற்கு முனைய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதற்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அதான குழுமம் முதலீடு செய்துள்ளது.

Related posts

குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்து – காணாமல் போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்பு

videodeepam

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் முடிவு

videodeepam

யாழ் விமான சேவை மீண்டும் ஆரம்பம் .

videodeepam