deepamnews
இந்தியா

நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் சிறையிலிருந்து  வெளியேறினர் – 31 வருட சிறைத்தண்டனைக்கு முடிவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் முருகனும், சாந்தனும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புழல் சிறையில் ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள நளினியின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு நேற்று முன்தினம் பிற்பகல் முதல் அதிகரிக்கப்பட்ட நிலையில் நளினி நேற்று பெண்கள் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்தே நளினி விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

videodeepam

பிரபல திரைப்பட இயக்குனரும், காமெடி நடிகருமான மனோபாலா காலமானார்..!

videodeepam

கடல் கடந்து கரம் பிடித்த காதலி. கடலூரில் திருமணம்

videodeepam