நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், நாளாந்தம் குறைந்த எண்ணிக்கையிலான கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகி வருவதாக சுகாதாரத் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நேற்று (20) நாட்டில் இரண்டு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, நாட்டில் பதிவான மொத்த கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,793 ஆகும்.
60 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட பெண்ணும் நேற்று உயிரிழந்துள்ளனர்.