deepamnews
சர்வதேசம்

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவொரு வர்த்தக உறவையும் தொடராது – பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவொரு வர்த்தக உறவையும் தொடராது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

வணிகத் தலைவர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,எனது தலைமையின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுடன் ஒத்துப்போவதை நம்பியிருக்கும் ஐரோப்பாவுடன் ஐக்கிய இராச்சியம் எந்த உறவையும் தொடராது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது இடம்பெயர்வு மற்றும் ஒழுங்குமுறை போன்ற விடயங்களில் அதிக சுதந்திரத்தை கொண்டு வர உதவியதுடன் நாட்டின் எல்லைகளில் சரியான கட்டுப்பாட்டை பெற்றுள்ளது.

பிரித்தானியா வேலை வாய்ப்புகளையும் எதிர்கால வளர்ச்சியையும் உருவாக்கப் போகும் தொழில்களில் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்காலத்திற்கு ஏற்ற ஒழுங்குமுறை ஆட்சிகள் நமக்குத் தேவை. அதைச் செய்வதற்கான சுதந்திரம் என்பது முக்கியமான விடயமாகும் என கூறியுள்ளார்.

Related posts

கெர்சன் நகரில் மீண்டும் பறந்த உக்ரைன் தேசியக்கொடி – பொதுமக்கள் ஆரவாரம்

videodeepam

பாலியல் உறவு போட்டியை நடத்த தயாராகும் சுவீடன்

videodeepam

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம் நடைமுறை

videodeepam