deepamnews
இந்தியா

எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்ட 14 கடற்தொழிலாளர்கள் விசைப்படகுடன் கைது

இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 கடற்தொழிலாளர்கள் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடலினருகே கடந்த 17ஆம் திகதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை விடுதலை செய்யவேண்டுமெனவும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 14 கடற்தொழிலாளர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மீன்பிடி படகை அரசுடமையாக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 14 கடற்தொழிலாளர்களும் விரைவில் தமிழகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு :  65.69 சதவீத  வாக்குப்பதிவு

videodeepam

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு  கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வு! – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு

videodeepam

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது! – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

videodeepam