deepamnews
இந்தியா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருகிறார்- பழ. நெடுமாறன மீண்டும் வலியுறுத்தல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ் தேசிய தலைவரும், உலகத் தமிழர் கூட்டமைப்பின் தலைவருமான பழ.நெடுமாறன மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தியாவின் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் மரணம் தொடர்பாக இலங்கை அரசு தவறான செய்திகளை பரப்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்று வதந்தி பரப்பினார்கள். அப்போது இந்தியா அதை ஆதரித்து விடுதலைப் புலிகளை தடை செய்தது. அதனால், கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் விடுதலைப் புலிகளை தடை செய்தன. தமிழீழு புலிகளை நசுக்க இலங்கை அரசுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தனர். 20க்கும் மேற்பட்ட நாடுகள். இந்தியா உள்ளிட்ட விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கின என நெடுமாறன் கூறினார்.

இந்தநிலையில் நிலைமை மாறி, தற்போது மக்கள் இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக இருப்பதாக நெடுமாறன் கூறியுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளில், சிங்கள மக்கள் ஒருபோதும் தங்கள் தலைவருக்கு எதிராகச் செல்லவில்லை. ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிகளை வகித்தவர்கள் இனவாதிகளாகவே இருந்தனர்.

அவர்கள் தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டி சுரண்டினார்கள் என்றும் தமிழ் தேசியவாத தலைவர் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் இப்போதுதான் முதன்முறையாக சிங்கள மக்களும், அறிவுஜீவிகளும் கூட ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர்.

ஏறக்குறைய அந்த அத்தியாயம் இப்போது மூடப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் இப்போது உண்மையை உணர்ந்துள்ளனர்’ என்று நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் மோடி தான் பொஸ்! – அவுஸ்திரேலிய பிரதமர் புகழாரம்

videodeepam

இந்தூரில் கோவில் படிக்கட்டு கிணறு இடிந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு

videodeepam

மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழப்பு – முகாம்களில் 13,000 மக்கள் தங்கவைப்பு

videodeepam