மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று அச்சத்தால், தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ அதன் மிகப்பெரிய மாவட்டத்திற்கு முடக்கநிலையை அறிவித்துள்ளது.
ஏறக்குறைய 19 மில்லியன் மக்கள் வசிக்கும் தெற்கு பெருநகரமான குவாங்சோ, நேற்று முன்தினம் அதிக மக்கள் தொகை கொண்ட பையூன் மாவட்டத்திற்கு ஐந்து நாட்கள் முடக்கநிலையை அறிவித்துள்ளது.
இந்த மாவட்டம், பொது போக்குவரத்தை இடைநிறுத்தியது மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற விரும்பினால் எதிர்மறையான சோதனையை முன்வைக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றது.