இலங்கையில் 62 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக UNICEF நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான மனிதாபிமான நடவடிக்கை தொடர்பான UNICEF நிறுவனத்தின் புதிய அறிக்கையின் பிரகாரம், மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களில் 2.9 மில்லியன் குழந்தைகளும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பான வருமானம் இல்லாத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளையேனும் பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாகவும் 5.3 மில்லியன் மக்கள் ஏற்கனவே உணவைத் தவிர்த்து வருவதாகவும், எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் எனவும் UNICEF நிறுவனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார சவால்கள், உணவு பணவீக்கத்தினால் கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக குழந்தை பாதுகாப்பும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக UNICEF நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.