deepamnews
இந்தியா

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி – பா.ஜ.க , காங்கிரஸ் தோல்வி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று பா.ஜ.க-விடம் இருந்து மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பா.ஜ.க 104 இடங்களிலும் காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.  

தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உலகின் மிகப்பெரிய கட்சி தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு பின்னர்  டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மியிடம் பாஜக இழந்துள்ளது.

டெல்லி மாநகராட்சியின் 250 வாா்ட்களுக்கு கடந்த 4-ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பழனிசாமி மான நஷ்ட வழக்கு!

videodeepam

தயார் நிலையில் 5093 நிவாரண முகாம்கள் – தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்

videodeepam

இந்தியாவிற்குள் கடல்வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரிப்பு – இந்திய நிதியமைச்சர் கவலை

videodeepam