deepamnews
இந்தியா

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை.

தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியா – இலங்கை இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

பிரதமர் மோடியுடனான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பின் போது , தனுஷ்கோடி – தலை மன்னார் இடையே பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனுஷ்கோடிக்கும்  தலைமன்னாருக்கும் இடையில் 13 மணல் தீடைகள் காணப்படுகின்றன.

தனுஷ்கோடியில் இருந்து முதல் 6 மணல் தீடைகள் இந்தியாவிற்கும் 7 முதல் 13 ஆவது வரையான தீடைகள் இலங்கைக்கும் சொந்தமானதாக காணப்படுவதுடன், ஒவ்வொரு மணல் தீடையும் சுமார் ஒரு கிலோ மீட்டர் கொண்டதாகக் காணப்படுகிறது.

பிரிட்டனின் போல்ஸ்டோன் நகரில் இருந்து பிரான்சின் கிளாசிஸ் நகருக்கு கடலுக்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிற்கு   சுரங்கப்பாதை அமைத்து, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து 1994-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருவதை The Hindu செய்தியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

இந்திய வான்பரப்புக்குள் திடீரென நுழைந்த பாகிஸ்தான் விமானத்தினால் பரபரப்பு!

videodeepam

கார் மீது பேருந்து மோதி விபத்து – 11 பேர் பலி

videodeepam

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை சிறுமைப்படுத்த வேண்டாம் – சீமான் கோரிக்கை

videodeepam