deepamnews
இலங்கை

போசனை குறைபாடு பிரச்சினையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

நாட்டில் வறுமை நிலைக்குள் தள்ளப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் போசனை குறைபாட்டால் பாதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாகவும் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் துரித வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டில் வறுமை நிலைமை அதிகரித்து வருகின்றது. இது பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில் குடும்ப சுகாதார பணியகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் நாட்டில் உள்ள 5 வயதுக்கும் குறைவான சிறுவர்களில் 43.4 பேருக்கு போசனை குறைபாடு உள்ளதாக தெரிய வந்துள்ளது என்றார்.

இதற்கு பெருமளவில் பொருளாதார நெருக்கடிகளும் அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களும் மற்றும் நாடு வங்ரோத்து நிலைக்கு சென்றமையும் காரணமாக அமைந்துள்ளன.

இதனால் நாட்டை இந்த நிலைமையில் இருந்து மீட்பதற்காக துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்விகள் சிலவற்றை எழுப்புகின்றேன். பொருளாதா நெருக்கடியால் வறுமைக்குள் தள்ளப்பட்டோரின் சரியான எண்ணிக்கை யாது? வறுமை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள கணக்கெடுப்பை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? சமூர்த்தி கொடுப்பனவினால் நன்மையடைந்தவர்கள், எதிர்பார்ப்பு பட்டியலில் இருப்போரின் எண்ணிக்கை யாது? இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை நிலைக்கு முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்று கேட்கின்றேன் என்றார்.  

Related posts

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

videodeepam

ஐந்து பிள்ளைகளை பெற்றிடுத்த திரு திருமதி  கடம்பன் தம்பதிகளுக்கு கௌரவம்!

videodeepam

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

videodeepam