deepamnews
இலங்கை

மின் கட்டண அதிகரிப்பு தீர்மானத்தை நீக்கவும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கோரிக்கை  

மின் கட்டணத்தை மேலும் அதிகரிக்கும் தீர்மானத்தை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிலையியல் கட்டளையின் கீழ் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மின்சார கட்டணத்தை இரண்டு தடவைகள் அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையினால் அறிவிக்கப்படடுள்ளது. இது பாடசாலை மாணவர்களின் பரீட்சைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது பற்றி தமக்கு தெரியாது என்றும் கூறியுள்ளது.

உண்மைகள் ஆட்சியாளர்கள் அறியாவிட்டாலும் மக்கள் மிகவும் துன்பத்தில் இருக்கின்றனர். இவ்வாறான நேரத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை நீக்கிக்கொண்டு, கட்டண அதிகரிப்பை செய்ய மாட்டோம் என்று அறிவியுங்கள் என்றார்.

Related posts

இலங்கையை வந்தடைந்தார் இந்திய விமானப்படை தளபதி – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தீர்மானம்

videodeepam

எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.

videodeepam

நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு

videodeepam