deepamnews
இலங்கை

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி  இன்று சந்திப்பு 

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக இன்று சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளளார்.

இதற்கமைய தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் இன்று ஜனாதிபதி கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

இந்த நிலையில், ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என   நீதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஜனாதிபதி, அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்நாட்டில் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருக்கின்றது.

ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னோடியாக நாளை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும், இந்த பேச்சுவார்த்தையில் கீழ் வரும் சில அடிப்படையான விடயங்களை வலியுறுத்துவதும் அவசியம் என்று கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பலாலி – சென்னை இடையிலான விமான சேவை அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்

videodeepam

ரணில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களது வழக்கு இன்று

videodeepam

வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலை முன்னெடுக்க 6 கட்சிகள் கூட்டாக அழைப்பு

videodeepam