பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய அவர்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணைகள் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் ஊடாக முன்னெடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.