deepamnews
இலங்கை

பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும்

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ நெல்லின் விலை ஏற்கனவே 115 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க  தெரிவித்தார்.

அரிசி இறக்குமதியை நிறுத்துவதன் பயன் விவசாயிகளுக்கோ அல்லது நுகர்வோருக்கோ கிடைக்கப் போவதில்லை என இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

500 ரூபாய் வரை உயரும் பாணின் விலை

videodeepam

மாகாண சபை தேர்தலையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

videodeepam

ஜி.எல்.பீரிஸின் தவிசாளர் பதவி பறிப்பு – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம்

videodeepam