deepamnews
இலங்கை

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இ.தொ.கா.விற்கும் இடையில் கலந்துரையாடல்!

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் கூட்டுப் பொறுப்பு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அரசாங்கங்களுக்கும் உண்டு என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டிய 10,000 வீடுகள் குறித்தும் பெருந்தோட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்திய ஆசிரியர்களை நியமித்து, புதிய பாடநெறிகள் ஆரம்பிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இ.தொ.காவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் அரசியல் பிரிவுக்கான முதன்மைச் செயலாளர் திருமதி பானு ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

Related posts

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்.

videodeepam

இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கப்போகும் ரஸ்யா

videodeepam

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் குறைப்பு – வெளியான புதிய அறிவிப்பு!

videodeepam