உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகின்றது.
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த சந்திப்பு எதிர்வரும் 11ஆம் திகதி காலை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.