ஒன்பது மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனங்கள் மேலும் தாமதமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக மொட்டுக் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றார்கள் எனவும் அறியமுடிகின்றது.
மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமன விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் சில மாதங்களுக்கு முன் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
மொட்டுக் கட்சி சார்பில் ஐந்து ஆளுநர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நான்கு ஆளுநர்களும் நியமித்தல் என்பதே அந்த இணக்கப்பாடு என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ஜனாதிபதி எதுவித காரணமும் இன்றி அந்த நியமனங்களை இழுத்தடிக்கின்றார் என மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.