deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 13 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உதயம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் சபை, உத்தர லங்கா கூட்டமைப்பு உள்ளிட்ட 13 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

புதிய கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் சின்னம் ஹெலிகொப்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவை, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா மகா சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழு என்பன புதிய கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

புதிய கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 36-ஐ தாண்டியுள்ளது.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவுறுத்தல்.

videodeepam

இலங்கையின் 3 வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் – அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல்

videodeepam

ஹெரோயின் போதைப்பொருள ஊசி மூலம் செலுத்தியவர்.சம்பவ இடத்தில் உயிரிழப்பு – யாழில் சம்பவம் 

videodeepam