deepamnews
இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சர்ச்சை – சம்பந்தனின் அறிக்கை வரும்வரை காத்திருப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக, கிளிநொச்சி மாவட்டத்தில், 3 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை நேற்று  செலுத்தியது.

கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்காக, நேற்று  கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

அதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவின் மத்தியஸ்துடனேயே தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேசவேண்டும் – கோவிந்தன் கருணாகரம் தெரிவிப்பு

videodeepam

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு..!

videodeepam

புத்தளத்தில் கரையொதுங்கும் டொல்பின்கள்

videodeepam