deepamnews
இலங்கை

மின் கட்டண அதிகரிப்பு யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டண திருத்தத்தை எதிர்ப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சரவை செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, 2009 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தின் பிரகாரம் காரணங்களை முன்வைத்து எழுத்துமூலம் இந்த முடிவை அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

முன்னதாக ஜனவரி 9 ஆம் திகதியன்று, மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டுதல்களைத் திருத்துவதற்கும், ஜனவரி 2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும் செலவை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அதன்படி,  பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த கட்டண திருத்தத்தை மீளாய்வு செய்யப்பட திட்டமிடப்பட்டது.

Related posts

அதிகாரப் பகிர்வுக்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு இந்திய பிரதமர் மோடி ஆதரவு.

videodeepam

நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் – நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

videodeepam

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட இணக்கம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு

videodeepam