deepamnews
இலங்கை

யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்!

யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று(புதன்கிழமை) காலை 10.20 மணியளவில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று முன்தினம் அமைச்சரவை வழங்கியது.

இவருக்கான நியனக் கடிதங்கள் நேற்று பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவால் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை சர்வமதத் தலைவர்களிடம் ஆசிபெற்ற பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன் இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை

videodeepam

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம்

videodeepam

தையிட்டி விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்

videodeepam