deepamnews
இலங்கை

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு!

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக திணைக்களத்தினால் சான்றளிக்கப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்படும் ஆவணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை செல்லுபடியாகும் வகையில் தயாரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு.

videodeepam

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து  – விமான நிலையத்தில் பாதுகாப்பு

videodeepam

ஏனைய கடனாளிகளுடன் சேர்ந்து, சீனா நம்பகமான உத்தரவாதங்களை வழங்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

videodeepam