deepamnews
இலங்கை

உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காக 1,600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில்

இன்று ஆரம்பமாகியுள்ள  2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காக 1,600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, பரீட்சை மையங்கள், ஒருங்கிணைப்பு மையங்கள், மண்டல மற்றும் மத்திய சேகரிப்பு மையங்கள் மற்றும் பிற இரகசிய ஆவணங்களை எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பை உறுதி செய்ய மொத்தம் 1,625 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பரீட்சை நிலையங்களில் உன்னிப்பாக அவதானம் செலுத்துமாறும், அப்பகுதிகளில் தொடர்ந்தும் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள் வெட்டு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

videodeepam

போராளிகளைப் பற்றிப் பேசும் அருகதை தமிழ் காங்கிரசுக்கு இல்லை

videodeepam

நுவரெலியா விபத்தில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட நுவரெலியா செல்கிறார் கல்வி அமைச்சர்

videodeepam