deepamnews
இலங்கை

மற்றுமொரு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்

 தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம். மொஹமட்டிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பதவி விலகுமாறு WhatsApp மற்றும் தொலைபேசி அழைப்பின் மூலம் அவருக்கு நேற்று முன்தினம் இரவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்,

இதனையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.
மொஹமட்டின் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அவரிடமிருந்தோ, ஜனாதிபதி செயலகத்திலிருந்தோ தமக்கு அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தோல்வி – மீண்டும் போராட்டம் நடத்தப்படுமென தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை

videodeepam

தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யுங்கள் – மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தல்.

videodeepam

ஜனாதிபதியிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை – தமிழ் கட்சிகள் தெரிவிப்பு

videodeepam