deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கண்காணிப்பிற்கு 4 அமைப்புகளுக்கு அனுமதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

எதிர்வரும் தேர்தலை கண்காணிப்பதற்காக நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பஃவ்ரல் (PAFFREL), கஃபே(CAFFE), சி.எம்.ஈ.வி(CMEV), உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேர்தலை கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 02 கண்காணிப்புக் குழுக்களுக்கு மாத்திரமே வாக்களிப்பு நிலையங்களுக்குள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஏனைய அமைப்புகள் வெளிப்புற கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், தற்போது மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அடுத்த வாரம் முதல் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

ஜக்கியதேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க அவர்கள் இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம்.

videodeepam

இலங்கைக்கான நிதி உதவிக்கு நாணய நிதியம் அனுமதி: ஜனாதிபதி இன்று விசேட உரை

videodeepam

தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam