deepamnews
இலங்கை

சீனாவின் கடன் ரத்து போதுமானதல்ல என்று நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை – ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய தெரிவிப்பு

இலங்கையின் கடன் தொடர்பில் சீனாவால் வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால கடன் ரத்து, சர்வதேச நாணய நிதிய கொள்கைகளுக்கு போதுமானதாக இல்லை என்பதை சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய தெரிவித்துள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதியளிப்புத் திட்டத்திற்கான ஆதரவை இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இதன்படி 10 வருடங்களுக்கு கடன் தடைக்காலத்தையும், 15 வருட மறுசீரமைப்பையும் வழங்க இந்தியா உடன்பாடளித்துள்ளது.

கடந்த வாரம் ஜப்பான் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பாரிஸ் கிளப் மூலம் ஆதரவை தெரிவித்தது

எனினும், சீனாவின் அரச வங்கி, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும், இதன் அடிப்படையில் இரண்டு வருட கடன் ரத்தை வழங்க முடியும் என்றும் இலங்கையின் நிதியமைச்சிற்கு ஒரு கடிதம் அனுப்பியது.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கை தொடர்பான திட்டத்தைத் தொடர சீனாவின் முன்மொழிவு போதுமானதாக இல்லை என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், சீனாவின் இரண்டு வருட கடன் ரத்து காலம் போதுமானதாக இல்லை என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இன்னும் உத்தியோகப்பூர்வமான எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Related posts

USAID நிறுவன நிதி அனுசரணையில் திருகோணமலை, மூதூர் பிரதேச மக்களுக்கு சிரமதான உபகரணங்கள் வழங்கிவைப்பு.

videodeepam

இலங்கையில் 62 இலட்சம் பேர் உணவுப் பாதுகாப்பின்மை நிலையில்- ஐ.நா அமைப்புகள் அறிக்கை

videodeepam

சதொச நிறுவனம் மேலும் மூன்று  பொருட்களின் விலைகள் குறிப்பு

videodeepam