deepamnews
இலங்கை

77 கோடி ரூபாவுக்கு நிதியமைச்சிலிருந்து பதில் இல்லை – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு அவசியமான ஒதுக்கத்தை கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சின் பதிலுக்காக தொடர்ந்தும் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வாக்களிப்புக்கான முதல் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு அவசியமான 77 கோடி ரூபா கோரி தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் நிதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியுடனான சந்திப்பு பெரிதாக நன்மை இல்லா விட்டாலும் சில விடயங்கள் ஆறுதல் தருவதாக அமைந்தது – சி.வி. விக்னேஸ்வரன்

videodeepam

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

videodeepam

அரசின் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்  – டலஸ் அழகப்பெரும

videodeepam