deepamnews
இலங்கை

இன்று முதல் 66% மின் கட்டணம் அதிகரிப்பு

இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில், 66% மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை ஜனவரி 02 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டதுடன், கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அதன் உறுப்பினர்கள் பலர் ராஜினாமா செய்தனர்.

Related posts

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் – பொலிசார் அடாவடித்தனம், 6 பேர் கைது

videodeepam

நெய்யில் கலப்படம் – பரிசோதனை செய்ய அமைச்சு தீர்மானம்

videodeepam

வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய பொலிஸார் கோரிக்கை.

videodeepam