deepamnews
இலங்கை

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையின் கட்டத்தில் இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் புதிய அணுகுமுறைகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பெண் ஒருவர் கணவரால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை.

videodeepam

இலங்கையில் உற்பத்தி செய்யப்படாத மீன்களை மாத்திரம் இறக்குமதி செய்ய அனுமதி! – அமைச்சர் டக்ளஸ்  தகவல்.

videodeepam

பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு!

videodeepam