deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நிறுத்தினால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்கிறார் சம்பிக்க ரணவக்க

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்குமென பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  இதன்போது சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவிக்கையில்,  

தேர்தலை பிற்போவதற்கு 21 தடவைகள் முயற்சித்த அரசாங்கம், 22ஆவது தடவையில் நிதி அமைச்சின் செயலாளரையும் அச்சக பிரதானியையும் பயன்படுத்திக்கொண்டு பணம் வழங்காமல் தேர்தலை பிற்போவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மிகவும் பயங்கரமான செயற்பாட்டுக்கு வழி அமைக்கும். தேர்தலை பிற்போடுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் மக்களின் இறையாண்மைக்கு  விடுக்கப்படும் மரண அடியாகும்.

பயங்கரவாத அச்சுறுத்தல் காலத்தில். சுனாமியால் பல மாதங்களுக்கு பிறகு மற்றும் கொரோனா தொற்று நிலைமையில் இந்த நாட்டில் தேர்தல் இடம்பெற்றது. நிறைவேற்று அதிகாரியின் தீர்மானத்தின் பிரகாரம் தேர்தல் நடத்தாமல் இருந்த சந்தர்ப்பங்களில் நாடு, இல்லாத வன்முறைக்கு பயணித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையிலும் பணம் இல்லையென்றோ அல்லது வேறு காரணங்களை காட்டி தேர்தலை பிற்போட்டால் நிச்சயமாக மக்கள் போராட்டம் ஒன்று ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

8 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நாளை நலன்புரி கொடுப்பனவு.

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!

videodeepam

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்..! சிக்கிய சிறுவன் மற்றும் பெண்..!

videodeepam