deepamnews
சர்வதேசம்

லிபியா அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்த 73 பேர் உயிரிழப்பு

அகதிகள் படகு, லிபியா அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதிலிருந்த 73 போ் உயிரிழந்துள்ளனா்.

ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெற விரும்பிய அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற படகு லிபியா அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக  UNHCR வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கியவர்களில் 11 பேரின் உடல்கள் லிபியாவின் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன. 7 பேர் உயிர் தப்பி கரைக்கு சென்றுள்ளனர். அவர்களின் உடல் நிலை மோசமாக இருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளைச் சோ்ந்த ஏராளமானவா்கள், ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி மத்தியதரைக் கடல் வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனா்.

அண்மைக்காலமாக, அத்தகைய அகதிகளை சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து மையமாக லிபியா உருவாகி வருகிறது.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் மத்தியதரைக் கடல் வழியாக ஆபத்தான பயணத்தில் ஈடுபட்ட 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஓய்வூதிய மறிசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் ஆர்ப்பாட்டம் 

videodeepam

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா யுக்ரைனுக்கு விஜயம்

videodeepam

கன்சர்வேடிவ் கட்சி படும் தோல்வியை சந்திக்கும் – பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபர் எச்சரிக்கை

videodeepam