பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் முன்னாள் அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சி தவிர்க்க முடியாத தோல்வியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் 2025 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்சர்வேடிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட 20 புள்ளிகள் குறைவடைந்துள்ளமையினால் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கயைம, முன்னாள் அமைச்சருமான ஜேக்கப் ரீஸ்-மோக் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சி தவிர்க்க முடியாத தோல்வியை தேர்தலில் சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஜேக்கப் கன்சர்வேடிவ் கட்சியை மீண்டும் பழமைவாதத்திற்கு மீட்டமைக்க சரியான தலைவராக இருப்பார் எனவும் தெரிவித்துள்ளது.