deepamnews
இலங்கை

பாராளுமன்றத்தில் எதிர்ப்பு போராட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் தீர்மானம் – பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

பாராளுமன்றம் நாளை கூட இருக்கிறது. இதன்போதே  எடும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வாரம் பாராளுமன்றம் சூடு பிடிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுதல், மின்சார கட்டண அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகள் எழுந்துள்ளதால், இதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தை விரைவாக கூட்டுமாறு சுதந்திர மக்கள் கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சிகளின் 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் மற்றும் பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி கோரிக்கை விடுத்திருந்தனர்.

என்றாலும் பாராளுமன்றம் நாழி கூடுவதற்கு ஏற்கனவே தீர்மானித்திருப்பதால், அவசரமாக கூடவேண்டி ஏற்படாது என அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன் உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடும்  நிலை மற்றும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பு போன்ற   நிலை காரணமாக எவ்வேளையும் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்றுவதை தடுப்பதற்காக பாராளுமன்றம் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் பாதுகாப்பு பிரிவு பிரதானிகள் தீர்மானித்துள்ளனர்.

Related posts

நீக்கப்படும் எரிபொருள் ஒதுக்க முறைமை – விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

videodeepam

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை – சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு

videodeepam

சட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் மனித உரிமை மீறப்படுகின்றமையை ஏற்க முடியாது

videodeepam