deepamnews
இலங்கை

சட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் மனித உரிமை மீறப்படுகின்றமையை ஏற்க முடியாது

இந்த நாட்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான செயற்பாடுகளின் ஊடாக மக்களின் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றமையை கண்காணிக்கக்கூடியதாக உள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையானது ஜனநாயக சமூகத்தின் உயிர்ப்பு மற்றும் சட்டவாட்சிக்கு பாரிய அச்சுறுத்தல் என்பதே மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைப்பாடு என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

21 வயது இளம்பெண் கொலை..! 29 வயது இளைஞன் கைது

videodeepam

மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

videodeepam

அரசியலமைப்பு பேரவைக்கு 3 சிவில் உறுப்பினர்கள் நியமனம்

videodeepam